இந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

மின்சாரத்தில் இயங்கும் காரை இந்தியாவிலேயே முதல்முதலில் சென்னையில் தான் அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

முந்தைய காலங்களில் தமிழகத்தின் வலியுறுத்தலால் , பல பொருட்களின் வரி குறைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மின்சாரத்தால் இயக்கப்படும் கார்களை ஊக்குவிப்பதற்கு , அதன் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்.

இந்நிலையில் இந்தியாவிலேயே மின்சாரத்தில் இயங்கும் காரை முதல்முதலில் சென்னையில் தான் அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது. வரி குறையும் போது அதிகஅளவில் பேட்டரி கார்கள் பயன்பாட்டிற்க்கு வரும் என தெரிவித்தார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close