ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் – முதல்வர் உட்பட பலர் அவரது நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனால் சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கட்சி தலைவரும் , முதல்வருமான எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்த இன்று காலை , சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாசிலை அருகில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.

அதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் , பல போலீசார் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பாளர்கள்தூவி மரியாதையை செலுத்தினர்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close