கிம் ஜாங் அன் தன் கனவு நகரத்தை வடகொரியாவில் திறந்து வைத்தார்

வடகொரியா தலைவரான கிம் ஜாங் அன் தன் கனவு திட்டங்களில் ஒன்றான நவீன நகரம் ஒன்றை திறந்துவைத்தார். கிம் ஜாங் அன் குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீக நிலப்பரப்பு பேக்குடு மலைக்கு அருகே அமைந்துள்ளது.அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் சொகுசு வசதிகளுடன் கூடிய நகரம் ஒன்றை அமைத்துள்ளார் கிம் ஜாங் அன். அந்த நகரத்துக்கு ‘சம்ஜியோன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சம்ஜியோன் நகரில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் வரை வாசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அடுக்கு மாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்கள் , சொகுசு விடுதிகள் , கலாச்சார மையம் மற்றும் உயர்தர மருத்துவமனைகள் என அணைத்து வசதிகளையும் கொண்ட இந்தநகரம் நவீன நாகரிகத்தின் ஒரு அமைப்பாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நகரத்தை திறந்து வைக்கும் காட்சிகளும், மக்களின் கொண்டாட்டங்களும் நிறைந்த படங்கள் அந்நாட்டு அரசு நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close