காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; அம்பாலா தொகுதியில் குமாரி செல்ஜா போட்டி

நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 18 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.இதில் அரியானா மாநிலத்திற்கு 6 பேரும், உதிர்ப்பிரதேசத்துக்கு 9 பேரும், மத்தியபிரதேசத்துக்கு 2 பேரும் என பிரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் அரியணை மாநிலம் அம்பாலா தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி குமாரி செல்ஜாவும் , சிர்சா தொகுதியில் அரியணை மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வரும் போட்டியிடுகிறார்கள்.

இவ்வாறு பல இடங்களில் காங்கிரஸ் கட்சி தங்கள் வேட்பாளர்களை தெரிவித்துள்ளது. இதுவரை 404 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது தங்கள் வேட்பாளர்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close