மக்களவை தேர்தல் பிரதமர் மோடிக்கு ; தமிழக முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து!

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடந்து முடிந்தநிலையில் நாடு முழுவதும் சுமார் 350 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் பிரதமர் மோடி மீண்டும் தன் ஆட்சியை தக்கவைத்துள்ளதால் அவருக்கு அனைத்து தரப்பினரின் சார்பிலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.இந்த சூழலில் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி தன் வாழ்த்துகளை தெரிவித்து கடிதம் அனுப்பினார்.

எடப்பாடி அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் , ” பொது தேர்தலில் சிறப்பான முறையில் வெற்றியை பெற்றதற்காக நான் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close