மணிப்பூரில் நிலநடுக்கம்;ரிக்டரில் 4.5-ஆக பதிவு!

மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் என்ற பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவானது.

இன்று இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

நேற்று காலை 10.19 மணிக்கு மணிப்பூரில் உள்ள சேனாபதி நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில் சுராசந்த்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close