சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை- அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்; அப்போது அவர் கூறியதாவது ; சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்க ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு கொண்டுவரும் தண்ணீர் திட்டமின்னும் 3 வாரங்களில் முடிவடைந்துவிடும்.

செயற்கை மழை திட்டம் என்பது சில இடங்களில் தோல்வியடைந்து இருந்தாலும் செயற்கை மழை குறித்து ஆய்வு நடைபெற்று வருகின்றது. சென்னையில் ஏற்பட்டுள்ள இந்த தண்ணீர் தட்டுபாட்டீர்க்கு காரணம் தமிழகத்தில் போதிய மழை பெய்யாததே காரணம் என்று கூறினார். மேலும் உள்ளாட்சி பணி வேகமாக நடைபெற்று வருகின்றது என்று கூறினார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close