மோடியே மீண்டும் பிரதமராவது சாத்தியமற்றது – கமலஹாசன் பேச்சு

ஈரோடு தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளரை ஆதரித்து கமலஹாசன் கோபிசெட்டி பாளையத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;

வருகின்ற மக்களவை தேர்தலானது , பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல் அல்ல. நம் மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல் ஆகும். மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது அது சாத்தியமற்றது. அதற்கான மனமாற்றம் நம் மக்களிடையே வந்துவிட்டது.

இந்த தேர்தலானது பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல் அல்ல ,நம்மை தேர்வு செய்வதற்கான தேர்தல். காமராஜர், எம்.ஜி.ஆர் ஆகியோர் அதிகம் படிக்காவிட்டாலும் மக்களை படித்தவர்கள் இவ்வாறு அவர் பேசினார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close