பூமியை நோக்கி வரும் ஒரு புதிய ஆபத்து – நாசா விஞ்ஞானிகள் தகவல்

பூமியை நோக்கி ஒரு ராட்சச சிறுகோள் வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பூமியை நோக்கி வரும் இந்த ராட்சச சிறுகோளிர்க்கு அஸ்டிராய்டு FT3 என்று நாசா விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த சிறுகோள் சுமார் 1,115 அடி மற்றும் 340 மீ விட்டம் கொண்ட பாறையினால் ஆனது என்று நாசா சிறுகோள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே போல் 2019 ஆண்டு முதல் 2116-ம் ஆண்டு வரை சுமார் 165 சிறுகோள் தாக்குதலை பூமியானது எதிர்கொள்ளும் என்ற அதிர்ச்சி தகவலை நாசா ஆராய்ச்சியாளர்கள் வெளியுட்டுள்ளபனர். மேலும் அஸ்டிராய்டு FT3 என்று அழைக்கப்படும் அந்த சிறுகோளானது 2019 அக்டோபர் 3-ஆம் தேதி பூமியை நோக்கி அல்லது பூமியை தண்டி செல்லும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளது போல அந்த சிறுகோளானது பூமியை தாண்டி சென்றால் பூமிக்கு ஏற்படும் ஆபத்துகள் குறைவு ஆனால் அந்த சிறுகோளின் திசையில் மாற்றம் ஏற்பட்டு பூமியை தாக்கினால் அதன் முடிவுகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close