ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் ஒருவர் சுட்டு கொலை

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பட்காம் மாவட்டத்தில் உள்ள க்ரல் போரா செக்போரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர்.

பின்னர் பாதுகாப்பு படையினர் அந்த இடத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தினர்.

இவ்வாறு இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் என்கவுண்டர் நடைபெற்ற அந்த இடத்தில் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்ட அந்த பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.மேலும் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close