பாகிஸ்தானில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 7-ஆக உயர்ந்துள்ளது

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இதுவரை கனமழை காரணமாக நான்கு குழந்தைகள் , ஒரு பெண் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் வடமேற்கு கைபர், பக்டுன் க்வா , ஷங்கரில்லா ,புனே மற்றும் அபோட்டாபாத் ஆகிய இடங்களில் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுஉள்ளதாகவும், அதில் ஆறு பெண்கள் உட்பட 18 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் கனமழையானது தொடர்ந்து பாய்துவருவதால் இந்த மழையின் காரணமாக அந்த மாகாணத்தின் ஐந்து வீடுகள் , இரு குடிசைகள் மூன்று பள்ளிகள் பலத்த சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்பட்டுள்ள தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த மழையானது இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close