பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் – இந்திய ராணுவமும் பதிலடி

புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய விமான படை பாகிஸ்தான் எல்லைக்குல் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கியது. மேலும் தொடர்ந்து இந்திய வான்வழியுள் பறந்து வந்த பாகிஸ்தான் விமானம் இந்திய விமானங்களால் விரட்டி அடிக்கப்பட்டது.

இந்த சம்பவங்களை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஜம்மு மற்றும் கஷ்மீரில் உள்ள ரஜோரியுள் நவஷெரா என்ற பிரிவில் இன்று மாலை 5.30 மணிக்கு போர்நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close