கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் என்ற நகரில் நேற்று முன்தினம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு சக்திவாய்ந்த நிலா நடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் சுமார் 6.4 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.அதுமட்டும் இல்லாமல் பல்வேறு வீடுகள் மற்றும் கட்டிடங்களில் பிளவு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கத்திக்கு பின் அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் ரிட்ஜ்கிரெஸ்ட் என்ற நகரில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மிக சக்திவாய்ந்த இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து 150 மெயில் தொலைவு வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு வீடுகள் குலுங்கியது. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட இத்தகை நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்கப்படவில்லை என்று அழ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் முன்னர் ஏற்பட்டுள்ளதைவிட 11 மடங்கு சக்திவாய்ந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close