இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 7.3 ரிக்டர் புள்ளிகளாக பதிவு

இந்தோனேசியா நெருப்பு கோளம் பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்தோனேசியாவில் மாலுமி தீவில் உள்ளூர் நேரப்படி காலை 6.23 மணிக்கு நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை.

இவ்வாறு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால் மக்கள் பதட்டம் அடைந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் கொடுக்கப்படவில்லை. இஇதுவரை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரம் வெளியிடப்படாததால் சேத அளவு பற்றி கூறஇயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த வாரம் தான் இதே மாகாணத்தில் 6.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close