ஜி 20 மாநாட்டின் போது பிரதமர் மோடி – டொனால்டு டிரம்ப் சந்திப்பு

ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் ‘ஜி 20’ என்ற உச்சி மாநாடு இன்று நடத்தப்பட இருக்கும் நிலையில் , இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு ஒரு தனி விமானம் மூலம் ஒசாகா புறப்பட்டு சென்றார். அதன் பின் நேற்று அதிகாலை ஒசாகா கன்சாய் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கினார் பிரதமர் மோடி அப்போது அவருக்கு அங்கு அன்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. பின்னர் இன்று டொனால்டு டிரம்புடன் சந்தித்து பேசினார் பிரதமர் மோடி அப்போது ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் உடன் இருந்தார்.

இவ்வாறு நடந்த இந்த முத்தரப்பு சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் இந்த சந்திப்பின் போது , தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற பிரதமர் மோடிக்கு டொனால்டு டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close