தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “எனது சகோதர, சகோதரர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்” என நரேந்திர மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.

தமிழர் திருநாளான தைபொங்கல் தமிழகம் முழுவதும் விமர்சியாக கொண்டாடப்படும் தனிப்பெரும் விழா. நாளை கொண்டாடப்படும் பொங்கல் திருநாளன்று, இயற்க்கைக்கும், சூரியனுக்கும், ஏர் உழும் மாட்டிற்கும் விவசாயிகள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர். தமிழர் கலாச்சாரமாய் தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்கள் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களின் திருநாளான பொங்கல் விழாவை இலங்கை, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “பொங்கல் திருவிழா நன்னாளில் தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டுவர நான் பிரார்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவளிக்கக் கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close