தென்னிந்தியாவை பாஜக அரசு புறக்கணித்துவிட்டதால் கேரளாவில் போட்டி – ராகுல் காந்தி அறிவிப்பு

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இந்த அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் பல்வேறு வாழ்க்கை நிலையில் வாழ்ந்து கொண்டுள்ள மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது பின்னரே இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இன்று தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர்.

இந்த அறிக்கையை வெளியிட்டபின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது;

தென்னிந்தியாவை மத்திய அரசு புறக்கணிப்பதாக அம்மாநில மக்கள் நினைப்பதாலேயே அம்மாநிலத்தில் போட்டியிடுகிறேன். தென்னிந்திய மக்களுக்கு ஆதரவாக நான் இருப்பதை காட்டவே கேரளாவில் நான் போட்டியிடுவதாகவும், மேலும் ரபேல் போர் விமான முறைகேடு குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close