இரண்டு நாள் பயணமாக துபாய் சென்றுள்ள ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்ப்பு!

துபாய்:

2 நாள் பயணமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாய் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஐக்கிய அரசு எமிரேடுகளுக்கு பயணமாக வந்துள்ள ராகுல் காந்தி பொது நிகழ்ச்சிகளிலும், தனிப்பட்ட முறையிலான தொழிலதிபர்கள் சந்திப்பிலும் பங்கு பெறுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் இளைஞர்களிடம் ராகுல் காந்தி கலந்துரையாடல் நடத்துகிறார்.

துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்திய-அரேபிய கலாச்சாரா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியின்  இறுதியில், ‘இந்திய கொள்கை’ என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.

ஐக்கிய அரபு எமிரேடுகளின் அமைச்சர்களை சந்திக்கும் ராகுல்காந்தி, ஷேக் ஜாயத் மசூதிக்கும் செல்கிறார்.

ராகுல் காந்தியுடன் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close