ராகுல் காந்தியின் முழு சொத்து விவரம் வெளியீடு!

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், கல்பேட்டா பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் திறந்தவெளி வாகனத்தில் ராகுல் காந்தி பேரணியாகச் சென்றார். அவருடன், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உடனிருந்தார். மேலும் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மற்றும் காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள் பலரும் சென்றனர்.

அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்த முழு சொத்து விவரங்கள் குறித்து தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி ராகுல் காந்தியிடம் மொத்தம் 15.88 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளதாகவும், அதிலும் அசையும் சொத்து மதிப்பு ரூ.5.80 கோடி எனவும், அசையா சொத்து மதிப்பு ரூ.10.08 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கில் அவரிடம் உள்ள 333.3 கிராம் தங்கமும் அடங்கும்.

மேலும் ராகுல் காந்தியிடம் ரொக்கமாக ரூ.40 ஆயிரம் பணமும், வங்கிகளில் ரூ.17.93 லட்சம் வைப்புத்தொகையும் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்போல பத்திரங்கள் மற்றும் பங்குகளாக ரூ.5.19 கோடி முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி ராகுல் தனது பெயரில் 72 லட்சம் கடன் உள்ளதாகவும், சொந்தமாக கார் இல்லை எனவும் அந்த வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close