ரெயில் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை – ரெயில்வே எச்சரிக்கை

இந்தியாவில் தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதிலும்
முக்கியமாக ரெயிலில் பயணம் செய்யும் மக்கள் அதிகம். ரெயிலில் பயணிக்கும் மக்கள் தினசரி பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே ரெயிலில் பயணிக்கும் பயணிகள் தங்கள் பயணத்தை பாதுகாப்பானதாக அமைத்துக்கொள்ள ரெயில்வே நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தெற்கு ரெயில்வேயானது சென்னை கோட்டத்தில் பயணிகள் ரேயுலகம், எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மின்சார ரெயில்கள் என இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரெயில்களில் பயணிக்க குறைந்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகின்றது. எனினும் சிலர் அந்த டிக்கட்டுகளையும் வாங்காமல் இலவச பயணம் மேற்கொள்கின்றனர். எனவே அவ்வப்போது டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.

மேலும் ரெயில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்பவர்கள் அதன் ஆபத்தை உணராமல் ” சாகச பயணம் ‘ செய்கின்றனர். அவ்வாறு சாகச பயணம் செய்பவர்களிடம் உள்ளே வந்து நிற்குமாறு கூறினால் , அதற்கு அவர்கள் காற்று வாங்குவதாகவும் , தங்களின் வேலை என்னவோ அதை செய்யுமாறு கூறிவிடுகின்றனர். எவ்வாறு ஆபத்தான பயணம் மேற்கொள்பவர்கள் மீது ரெயில்வே சட்டம் ‘156’ பிரிவின் கீழ் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு சாகச பயணம் மேற்கொண்ட ஒரு பயணிக்கு பரங்கிமலையில் கோர விபத்து ஏற்பட்டது. எனினும் ரெயிலில் பயணிக்கும் பயணம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் ரெயில் படிக்கட்டுகளில் பயணிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து , கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close