சென்னையில் பல்வேறு இடங்களில் மழை – மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் பல நாட்களாக வெயில் வாட்டிவதைத்து வந்தது. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணியளவில் சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டிருந்த செய்தியில் , சென்னையில் வேனல் மேகமூட்டத்துடன் இருக்கும். மேலும் நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழை பெய்யகூடும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பெரம்பூர், எழும்பூர்,புரசைவாக்கம், பெரியமேடு ,வானகரம் , சைதாப்பேட்டை வேளச்சேரி , தரமணி பூந்தமல்லி , போரூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

 

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close