புது டெல்லியில் குடியரசு தின விழா :தமிழக அலங்கார ஊர்தி அசத்தல்!

டெல்லி: குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்றது. காந்தியடிகள் எதனால் மேலாடை அணிவதை முற்றிலும் தவிர்த்தார் என்ற வரலாற்று உண்மையை அந்த அலங்கார ஊர்தியில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்வல அணிவகுப்புகள் நடைபெற்றது. அதில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் பங்கேற்றது.

அப்போது, மதுரையில் காந்தியடிகள் விவசாயிகளை சந்தித்த நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது. விவசாயிகள் மேலாடை இன்றி இருப்பதை பார்த்து, காந்தியடிகள் தனது மேலாடையை துறந்த நிகழ்வு அதில் காட்சிப்படுத்தப்பட்டது. காந்தியடிகள் வாழ்க்கையில் எடுத்த மிக முக்கியமான முடிவாக இது பார்க்கப்படுகிறது.

அலங்கார ஊர்திக்கு கீழே, கோலாட்டம், நாதஸ்வரம் முழங்க நடந்து சென்றது மிகவும் சிறப்பாக இருந்தது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close