நாளை நடக்க இருக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் -தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற வாக்குபதிவின் முடிவானது நாளை வாக்கெண்ணிக்கை நடத்தபட்டு வெளியிடப்படவுள்ளது.

இதுபற்றி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ;

நாளை காலை 8 மணிக்கே தபால் வாக்குகளுடன் மின்னணு இயந்திர வாக்குகளையும் எண்ணும் பணி தொடங்கும் எனவும் , மின்னணு இயந்திரங்களில் எண்ணப்பட்ட பின்னரே ஒப்புகை செட்டுகளும் எண்ணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் நடத்தப்படும் வாக்கெண்ணிக்கையை பார்வையிட 88 தேர்தல் அதிகாரிகள் வந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். 19 கம்பெனி துணை ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

17 ஆயுரத்திற்கும் அதிகமானோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் பணி நடத்தப்படும் இடத்தில் 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 1,520 துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவானது உடனுக்குடன் வெளியிடப்படும். வெப் கேமிரா மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படும். அதிகபட்சமாக 34 சுற்றுகள் வரை நடத்தப்படும், ஒரு சுற்று முடிய கிட்டத்தட்ட 30 நிமிடமாகும் என கூறியுள்ளார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close