ஸ்கூல்பேக் , லன்ச்பேக் வாங்க வற்புறுத்த கூடாது ; தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

கோவை மாதா அமிர்தானந்தமயி என்ற அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஹேமலதா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். இதில் பாட புத்தகங்களுக்கு ரூ.5,000 , சீருடை , லஞ்ச் பேக் போன்ற பொருட்களுக்கு ரூ.500 கேட்கப்படுவதாக அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் பாட புத்தகம், காலனி, லஞ்ச் பேக் போன்றவற்றை தவிர மற்ற பொருட்களை வாங்க அதாவது ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக் ஆகியவற்றை வாங்க பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை வற்புறுத்த கூடாது என்றும் அறிவுறுத்தியது. மேலும் இந்த வழக்கை ஜூன் 10-ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் ஒத்திவைத்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close