திண்டுக்கல்லில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து-30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்படியுள் உள்ளது புனித சூசையப்பர் நடுநிலை பள்ளி. இந்த பள்ளியில் படிக்கும் சுற்றுவட்டார மாணவர்களை அவர்களது பெற்றோர் ஒரு தனியார் பள்ளி வேனை ஒப்பந்தம் செய்து அதில் அனுப்பிவைக்கின்றனர். எப்பொழுதும் போல் அந்த பள்ளி தனியார் வேன் இன்றும் மாணவர்களை ஏற்றி சென்றது அப்போது திடீரென் முள்ளிப்பாடி- கோளப்பாடி இடையே சென்றபோது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close