தமிழகத்தில் தான் அதிக பணப்பட்டுவாடா இதுவரை ரூ.107 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வரும் ஏப்ரல் மதம் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இவ்வாறு செய்யப்பட்டத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.107 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

17-வது தேர்தல் வாக்குப்பதிவானது வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதியிலிருந்து 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே அரசியல் காட்சிகள் தங்கள் பணப்பட்டுவாடாவையும் துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.107 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் தான் பணப்பட்டுவாடாவில் முதல் இடத்தை வகிக்கிறது.

தமிழ்நாட்டை அடுத்து உத்திரப்பிரதேசம் ரூ.104.53 கோடி , அந்திரப்பிரதேசம் ரூ.103.4 கோடி மற்றும் பஞ்சாபில் ரூ.92.8 கோடி என அதிக அளவு பணம் மற்றும் நகை பொருட்கள் என பல்வேறு வகைகளில் கைப்பற்றப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close