சென்னை மாணவர்கள் போராட்டம்:சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது ஜனாதிபதியும் ஒப்புதலையும் பெற்றுள்ளது எனினும் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.மேற்கு வாங்கலாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

டெல்லியில் இந்த குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா என்ற இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினார்கள். அப்போது வன்முறை வெடித்ததால் அந்த மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.இன்று காலை சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

சென்னை பல்கலைக்கழத்திற்கு டிச.23 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.டிச.23 வரை தேர்வுகள் ,வகுப்புகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைகழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஸ்துமஸ் , புத்தாண்டு விடுமுறைகள் உள்ளதால் ஜன.1 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close