போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியருக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் – பள்ளி கல்வித்துறை அரசாணை

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இன்றும் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் இந்த போராட்டத்தால் அரசு பணிகளும், பள்ளிமாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டுவருகிறது.இவ்வாறு பள்ளிகளை மூடிவிட்டு ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் வீட்டுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருசில பள்ளிகளில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்களே பாடம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை போல் சென்னையிலும் இந்த போராட்டத்தால் அரசு பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நாளான இன்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கலெக்டர் அலுவலகம் அருகில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

சென்னை ஐகோர்ட் அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்திற்கு நேற்று தடை விதித்திருந்தது.மேலும் 25-ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ உயர் மட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் இன்று சென்னை திருவல்லிகேணியில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு விதி 17பி-யின் கீழ் நோட்டிஸ் அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதாக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close