இமாச்சல பிரதேசத்தில் பயங்கரம் – சொகுசு விடுதி இடிந்து விழுந்தது ; 7 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேச தலைநகர் ஷிம்லாவில் இருந்து கிட்டத்தட்ட 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மாவட்டம் தான் சோலன். இது ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. மேலும் இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்துகொண்டுள்ளது .இந்நிலையில் இந்த மாவட்டத்தில் நாஹன் குமரஹாட்டி சாலையை ஒட்டிய பகுதியில் சொகுசு விடுதி ஒன்று உள்ளது.4 அடுக்கு மாடிகளை கொண்ட இந்த விடுதி நேற்று மழையின் காரணமாக திடீரெனெ இடிந்து விழுந்தது.

எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த விபத்தால் அந்த சொகுசு மாடியில் இருந்த 42 பேர் சிக்கி கொண்டனர். இந்த விபத்து பற்றி தகவலறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 6 பேர் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் 7 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் , மீட்பு பணி தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close