நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக -வின் தேர்தல் அறிக்கை வரும் 7-ம் தேதி வெளியீடு…

பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7-ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில், ஆளுங்கட்சியான பாஜக, வரும் 7-ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த (2014) பாராளுமன்றத் தேர்தலின்போதும், இதே நாளில் தான் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. எனவே, அந்த தேதியை இந்த முறையும் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மிஞ்சும் அளவிற்கு, புதிய திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close