சென்னையில் மீண்டும் கொண்டாட தொடங்கப்பட்டது ‘பஸ் டே’ – வியாசர்பாடி அருகே போக்குவரத்து முடங்கியது.

பொதுமக்களுக்கு இன்னல்களை விளைவிக்கும் ‘பஸ் டே’ எனும் தினத்தை கொண்டாட சென்னை உயர்நீதி மன்றம் தடைவிதித்திருந்தது.

மேலும் பொதுமக்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் இந்த பேருந்து தினம் எனும் பஸ் டேவை எந்த ஒரு மாணவர்களும் கொண்டாடக்கூடாது என்றும், அந்த தினத்தில் பட்டாசுகளையும் வெடிக்க கூடாது என்றும் நீதிமன்றம் கடுமையாக நிபந்தனைகளை விதித்திருந்தது.

ஆனால் தற்போது சென்னையில் மீண்டும் ‘பஸ் டே’ கொண்டாட்டம் தலைதூக்க தொடங்கியுள்ளது.

இந்த தடையை மீறி கல்லுரி மாணவர்கள் வியாசர்பாடி அருகே பேருந்தின் மேற்கூறையுள் நின்று கொண்டாடினர். இந்த கல்லுரி மாணவர்களின் கொண்டாடத்தால் வியாசர்பாடி அருகே பெருமளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இவ்வாறு செய்த கல்லூரி மாணவர்களால் வேலைக்கு செல்வோர்களும், பள்ளிக்கு செல்வோர்களும் கடுமையாக பாதிப்படைந்தனர்

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close