லிபியாவில் தொடங்கியது உள்நாட்டு மோதல் ; பலி எண்ணிக்கை 220-ஆக உயர்வு – உலக சுகாதார நிறுவனம் தகவல்

லிபியா நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டில் ஆட்சி செய்த  அரசுக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டது.  இந்த சம்பவத்தால் அதிபர் முகமது கடாபி கொல்லப்பட்டார். அதனால் அந்த அரசு இரு குழுக்களாக பிரிந்து தனித்தனியே செயல்பட்டது.தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆதரவாக படை தளபதி கலீபா ஹப்தர் தலைமையிலான லிபிய தேசிய ராணுவம் நாட்டின் கிழக்கு பகுதியையும், ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் அரசு திரிபோலி பகுதியில் இருந்து மேற்கு பகுதியையும் ஆட்சி செய்தது.

இந்நிலையில் எதிர் தரப்பு அரசை சேர்ந்தவர்களை தீவிரவாதிகள் என குறி, அவர்களின் பிடியிலிருந்து திரிபோலி நகரை மீட்க ஹப்தர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் அடிப்படையில் கடந்த 4-ஆம் தேதி உள்நாட்டு மோதல் ஏற்பட்டது. இதன் முடிவில் திரிபோலியின் இரு பகுதிகள் ராணுவத்தின் பிடியில் வந்தது. இதற்கு பின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 7-ஆம் தேதி ராணுவத்தின் மீது இடைக்கால அரசு பதில் தாக்குதல் நடத்தியது.

இவ்வாறு நடைபெற்ற இந்த இரு மோதல் சம்பவங்களாலும் பலி எண்னிக்கை 220-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1060 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் சுகாதார பணியாளர்கள் , பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த தகவல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close