ஆரோக்யா நிறுவனம் பாலின் விலையை 2 ரூபாய் உயர்த்தியது!

பிப்ரவரி மாதம்1-ஆம் தேதி முதல் பாலின் விலையை உயர்த்துவதாக தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா தெரிவித்துள்ளது. அதன் பழைய விலையிலிருந்து ரூ.2 உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பால் லிட்டர் ரூ.52 – லிருந்து ரூ.54-ஆக அதிகரிக்கப்படுகிறது. நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.48-லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு ஆரோக்யா நிறுவனம் பால் விலையை உயர்த்த பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close