எதிர்கட்சிகளின் மாநாடு பிரம்மாண்டம்!!:பதட்டத்தில் பா.ஜ.க!!

மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ள பிரிகேடு பரேட் மைதானத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு பிரம்மாண்ட கூட்டணி மாநாடு துவங்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் தேதி வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால்தான் பா.ஜ.வுக்கு எதிரான கூட்டணி மாநாடு துவக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இவ்வாறு மம்தா பானர்ஜி தலைமையில் துவங்கப்படும் கூட்டணி மாநாட்டில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க , காங்கிரஸ், தெலுங்குதேசம், ம.ஜ.க , சமாஜ்வாதி போன்ற பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ளவில்லை.

எனினும் இந்த மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதினார். இந்த மாநாட்டிற்கு காங்கிரஸ் சார்பாக மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டிருந்தது.

இவ்வாறு நடைபெற்றிருக்கும் இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் , அகிலேஷ் யாதவ் , பரூக் அப்துல்லா , சந்திரபாபு நாயுடு, சரத்பவார், தேவகவுடா, குமார சாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரியின் பேச்சு;

எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு மாநாட்டில் கலந்துகொண்ட அவர் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த எதிர் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும், மக்களின் செல்வாக்கை பிரதமர் மோடி இழந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

 

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் மாநாட்டாக இந்த கூட்டம் அமையும் என்று அக்கட்சியினர் கூறியுள்ளனர்.” ஒற்றுமை இந்தியா மாநாடு ” என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ள இந்த மாநாடு பா.ஜ.வுக்கு எதிராகத்தான் பல்வேறு எதிர் கட்சி தலைவர்கள் கூடியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பா.ஜ.க பெரும்பதட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close