அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் உறுப்பினர் குழுவை நீதிமன்றமே அமைக்கும் – மதுரை உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் என ஐகோர்ட் மதுரை கிளை அறிவித்து உள்ளது.

மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுத் தலைவர், ஜல்லிக்கட்டு நடத்த ஜனவரி 15-ஆம் நாள் அனுமதியும், காவல்துறைப் பாதுகாப்பும் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுத் தலைவர் கணக்கு வழக்குகளைத் தெரிவிப்பதில்லை எனக் குறிப்பிட்டு அவருக்கு எதிராக ஒரு சிலர் எதிர் மனு தாக்கல் செய்தனர். மேலும் குறிப்பிட்ட சில சமூகத்தினர் மட்டுமே பங்கெடுப்பதாகவும், அனைத்துச் சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை எனவும் எதிர்மனுதாரர்கள் தெரிவித்தனர். அனைத்துச் சமூக மக்களின் பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையெனில் ஜல்லிக்கடுக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவை நீதிமன்றமே அமைக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, காவல் ஆணையர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close