மகாராஷ்டிராவில் அணை உடைந்ததில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது!.

மராத்திய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது சற்று தாமதமாக தொடங்கி இருந்தாலும் , தற்போது அம்மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரை புரட்டிப்போட்டு வருகிறது. கடந்த வெள்ளி கிழமை தொடங்கிய இந்த பருவ மழையானது தொடர்ந்து இடைவிடாமல் பெய்ததால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

இந்நிலையில் ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் அந்த அணை கடந்த 3-ஆம் தேதி திடிரென உடைந்தது. இதனால் அருகில் உள்ள கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தில் தத்தளிக்கின்ற நிலை ஏற்பட்டது.

 

இதுவரை 12 வீடுகள் அடித்து செல்லப்பட்டு உள்ளது. மேலும் அந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 23 பேர் அடித்து செல்லப்பட்டு உள்ளனர். இதில் 11 பேர்களின் உடல் மீட்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் நேற்று மேலும் 4 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இறந்தவர்களின் உடல்கள் கிடைத்துக்கொண்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை இதுவரை 18 உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.இந்த வெள்ளத்தில் சிக்கி சேதமானதை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close