குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

கேரளாவில் அரசியல் காட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திருத்த சட்டத்திற்கு எதிராக இப்போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கேரளா முஸ்லீம் இளைஞரகள் பெருமன்றம் , எஸ்.டி.பி.ஐ கட்சி உள்ளிட்ட 33 அமைப்புகளும் மற்றும் பல்வேறு கட்சிகளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு நடத்தப்படும் போராட்டத்திற்கு முன்கூட்டியே அனுமதி பெறாததால் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா மாநில டி.ஜி.பி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது , இந்த போராட்டம் சட்டவிரோதமானது என்பதால் போராட்டக்காரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவண்ணம் மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவண்ணம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள் சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடாததால் அங்காங்கே கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இன்று நடக்க இருக்கும் தேர்வுகள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக தமிழக மற்றும் கேரளா எல்லையக்கிடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கேரளா எல்லைக்கு செல்லும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close