குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை, கால்கள் – ஆய்வு செய்யும் மருத்துவ குழு

சென்னை குப்பை கிடங்கில் ஒரு பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்டதை பற்றி ஆய்வு செய்ய 3 மருத்துவர்களை கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஒரு குப்பை கிடங்கில் பெண்ணின் கை , கால்கள் வெட்டப்பட்டநிலையில் கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கை, கால்கள் வெட்டப்பட்டு வீசப்பட்டுள்ள அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என கண்டறிவதற்கு டி.என்.ஏ சோதனை நடத்தப்படவுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க மூன்று மருத்துவர்களான ராமலிங்கம், எழில்கோதை , நரேந்திரன் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close