உலகிலேயே மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றிபெற்றது!

உலகிலேயே முதல் முறையாக 92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்ட ஆகாயகப்பல் கடந்த 2017-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அவ்வாறு பரிசோதித்தபோது அந்த ஆகாய கப்பல் விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பெண் படுகாயமடைந்தார்.

எனவே அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது.இந்நிலையில் தற்போது 25 மில்லியன் செலவில் ஒரு புதிய ஆகாய கப்பலாக புனரமைக்கப்பட்டது.

இவ்வாறு புனரமைக்கப்பட்ட அந்த ஏர்லெண்ட்டர் ஆகாய கப்பல் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததை தொடர்ந்து , ஆகாய கப்பல் பயணிகளை ஏற்றி கொண்டு செல்வது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ஐரோப்பிய பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close