மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிலாபாத் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷேக் சாந்த் பாஷா. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் என இரு குழந்தைகள் உள்ளனர்.

அவர்கள் இருவரும் ஒரு நாள் மின் விளக்கை வைத்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அவர்களது
பெற்றோர் தன் குழந்தைகள் கையில் வைத்திருந்த அந்த விளக்கானது மின்சாரம் இல்லாமல் எரிவதை கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். எனவே அவர்கள் வேறொரு பல்ப்பை வாங்கிக்கொண்டு வந்து அவர்களின் உடலில் வைத்து சோதித்த போது அந்த பல்ப்பும் குழந்தைகள் உடலில் பட்டதும் எரிய தொடங்கியது.

இந்த அதிசயத்தை கேள்விப்பட்ட அக்கம்பக்கம் இருந்த மக்கள் ஆளுக்கு ஒரு பல்ப்பை கொண்டு வந்து அவர்கள் மீது வைத்து எரியவைத்து பார்த்தனர். அதனால் ஷேக் சாந்த் பாஷா அவர்களின் வீடு எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

உடலில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது மின்சாரம் இல்லாமல் விளக்கினை தொட்டாலும் அது எரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close