சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் – தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது

தற்போது சென்ட்ரலில் உள்ள ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். அப்போது அவர் சென்னையுள் உள்ள சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் ரெயில் நிலையம் என பெயர் சுடப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் ரெயில் நிலையம் என பெயர் வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஒப்புதலை அடுத்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் ரெயில் நிலையம் என பெயர் வைக்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close