ரூ.7.46 லட்சத்தில் புதிய சுஸூகி வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி ஏ.பி.எஸ் மோட்டார் சைக்கிள் அறிமுகம் !

7.46 லட்சம் ரூபாய் விலையில் 2019 சுஸூகி வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி ஏ.பி.எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வடிவமைப்பில் வெளிவந்துள்ள வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி மோட்டார்சைக்கிள் மேலும் பல கூடுதலான நவீன வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இப்புதிய பைக்கில் 645சிசி 4-ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய சுஸூகி வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி ஏ.பி.எஸ் மோட்டார் சைக்கிளின் சிறப்பம்சங்கள்:

சுஸூகி வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி ஏ.பி.எஸ் மாடலில் ஹாஸார்ட் விளக்குகள் மற்றும் ரிஃப்லெக்டர் உடன் புதிதாக கிராபிக்ஸ் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாகங்களை தருவித்து ஒருங்கிணைக்கப்படுகின்ற வி – ஸ்ட்ராம் 650 எக்ஸ்டி மாடலில் 645cc, லிக்யுட்-கூல்டு, நான்கு ஸ்ட்ரோக், வி ட்வீன் இன்ஜின் கொண்டு 70bhp பவர் மற்றும் 66Nm டார்க் கொண்டதாக விளங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி மோட்டார் சைக்கிள்களின் எடை 213 கிலோ கிராமாக உள்ளது.

வி – ஸ்ட்ராம் 650 எக்ஸ்டி மோட்டார் சைக்கிளில், 18 இன்ச் முன்புற வீல் மற்றும் 17 இன்ச் ரியர் வீல் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம் தொழில்நுட்பமும் இதில் இடம்பெற்றுள்ளது. இதனால், சாலைகளில் வாகனத்தின் வேகத்தை எளிதாக கட்டுப்படுத்த முடியும். வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி மோட்டார் சைக்கிள்களில் இரு விதமான டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதை தேவைப்பட்டால் சுவிட்ச் ஆப் செய்து கொள்ள முடியும்.

வி – ஸ்ட்ராம் 650 எக்ஸ்டி மோட்டார் சைக்கிளின் விலை 7.46 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close