ஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் !

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த போன் மிக குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தபடுகிறது.

 

5 கேமரா கொண்ட நோக்கியா 9, டிஸ்பிளேவில் துளைகொண்ட நோக்கியா 8.1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், நோக்கியா 6.2 (2019) ஸ்மார்ட்போனும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நோக்கியா 6.2 (2019) ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம் என இருவித வேரியன்ட்களில் வெளியாக இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, செய்ஸ் லென்ஸ், OZO ஆடியோ வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகி அதன்பின் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டை பொருத்த வரை சீனாவில் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ நடைபெறலாம் என தெரிகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close