தக்காளியின் விலை கிடுகிடு உயர்வு!

கடந்த ஓரிரு வாரங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில், சமீபத்தில் வீசிய கஜா புயலால், அந்த பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தக்காளி சாகுபடி அதிகம் மேற்கொள்ளப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில், புயல் மற்றும் பனியின் காரணமாக, தற்போது, விளைச்சல் மிகவும் சரிந்துள்ளது.

இந்த நிலையில் இந்த மாதம் 2-ந் தேதியில் இருந்து தக்காளி விலை ஏறுமுகமாக உள்ளது. தற்போது கோலார் தக்காளி மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.100 முதல் ரூ.150-க்கு விற்பனையான 15 கிலோ தக்காளி கொண்ட ஒரு பெட்டி, தற்போது ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது.

கடந்த ஒரு வாரத்தில் தக்காளி விலை பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பனியின் தாக்கம் அதிகம் இருப்பதால், தக்காளி வரத்து குறைந்து, விலையும் அதிகரித்துள்ளது. மொத்த விற்பனையில், ஒரு கிலோ நவீன் தக்காளி 60 ரூபாய்க்கும், நாட்டு தக்காளி 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இது, பாெதுமக்கள் மட்டுமின்றி, ஓட்டல் நடத்துவோருக்கும் கவலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் கரும்பு அதிகளவில் பயிரிட்டுள்ளதால், தக்காளி விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. தக்காளி வரத்து குறைந்தால், அதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close