நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 20 பேர் பரிதாப பலி!

நைஜீரியா நாட்டில் தென்கிழக்கு பகுதியில் கிராஸ் ரிவர் மாநிலத்தில் உள்ள ஒடுக்பானி நகரில் எண்ணெய் ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது.

அப்போது திடீரென அந்த லாரி நாடு ரோடில் கவிழ்ந்தது. இதனால் அந்த லாரியில் இருந்த எண்ணெய் ஆறாக ரோட்டில் ஓடியது.

இதை அறிந்த மக்கள் அங்கு சென்று கொட்டிய அந்த எண்ணெயை தாங்கள் கொண்டுவந்த கேன்களில் சேகரிக்க தொடங்கினர்.

அப்போது அந்த டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது.இந்த எதிர்பார்க்காத சம்பவத்தால் அந்த டேங்கர் லாரிக்கு அருகே இருந்து 70-க்கும் மேற்பட்ட பொது மக்கள் தீயில் கருகினர்.

இவர்களில் 20 பேர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த தீயில் கருகியவர்கள் பலரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close