உணவு கொடுக்க சென்ற பெண்ணை ; உயிருடன் முழுங்கியது முதலை

இந்தோனேசியாவில் சுலவேசி என்ற பகுதியில் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் 17 அடி நீள முதலை ஒன்று அதற்குரிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த முதலைக்கு உணவு கொடுப்பதற்காக ஒரு பெண் ஆராய்ச்சியாளர் டேஸி டூவோ முயற்சித்திருக்கிறார்.

அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் அந்த முதலை 8 அடி தூரத்தில் தாவி குதித்தது. அப்போது உணவை கொடுக்க முயன்ற டேசியை அந்த முதலை தரதரவென அதன் இடத்திற்கு வாயால் இழுத்து சென்றது. பின்னர் டேசியை உயிருடன் அப்படியே முழுங்கியதாக கூறப்படுகிறது.

டேசி முதலையின் வாயில் பாதி சென்ற நிலையில் அவரது தோழி அதை பார்த்திருக்கிறார்.எனினும் டேசியை முதலையின் வாயிலிருந்து காப்பாற்றமுடியவில்லை. இந்நிலையில் டேசியை பற்றி சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதாவது டேசி ஏன் முதலையின் இவ்வளவு அருகில் செல்ல வேண்டும்? ஆபத்தான விலங்குகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தானே , அது மட்டும் அல்லாமல் சிலர் முதலை அவ்வளவு தூரம் தாவியதா? இல்லை வேறு ஏதாவது நடந்ததா என்று கேள்விகளையும் எழுப்பி உள்ளனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close