தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல்!

தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை இன்று தமிழகமெங்கும் தமிழ் மக்கள் உட்ச்சாகத்துடன் கொண்டாடியநிலையில் தூத்துக்குடி கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதனால் அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்த குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்பாயம் , ‘ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன் , ஆலை செயல்படுத்துவதற்காக அனுமதியை தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அளிக்க வேண்டும் ‘ என்று தெரிவித்துள்ளது.

எதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உய்ரநீதிமன்றத்தின் மதுரை கிளை , ‘ ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது ‘ என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி வேதாந்தா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையிட்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் , மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தூத்துக்குடி மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி வட்டார மக்கள் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அதாவது வீடுகளில் பொங்கல் பானைக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கோலம் போட்டும், நோட்டீசுகளை ஒட்டியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close