மோடியை பிரதமராக்க உழைப்பவர்கள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்….. தமிழிசை சௌந்தராஜன் !

பிரதமர் நரேந்திர மோடியை பிரதமராக்க உழைப்பவர்கள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறுகையில்,

தமிழக மக்களை பாதிக்கும் வகையில் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அனுமதிக்காது, மோடியை பிரதமராக்க உழைப்பவர்கள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்றார் தமிழிசை.

மேலும் ஏற்கெனவே கூட்டணியில் இருந்தவர்கள் மீண்டும் கூட்டணி அமைக்கவும், இல்லாதவர்கள் புதிய கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. எதிர் கூட்டணியில் இல்லாதவர்கள் பாஜக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது.

கட்டாயப்படுத்தி இந்தியை புகுத்தும் நோக்கம் பாஜகவுக்கு இல்லை. 10 சதவீதம் இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் நலிந்த மக்கள் மட்டுமே. பாஜக கூட்டணியில் மோடியின் கொள்கைளை மதிப்போருக்கும் திட்டங்களை ஆதரிப்போருக்கும் எப்போதும் இடம் உண்டு என்று கூறினார்.

 

 

மேலும், தமிழிசை சௌந்தராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினை விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கிராமசபைக் கூட்டம் பெயரில் நாடகசபை கூட்டம் அரங்கேற்றம்… ஒற்றையாக அமர்ந்து ஓரங்க நாடகம்? வரும் காலத்தில் ஓரங்கட்டப்படுவோம் என்பதன் அறிகுறி? 5 முறை ஆண்ட திமுக! ஊழல்ஆட்சி! குடும்ப ஆட்சி! மறக்க முடியுமா? உரக்கச் சொல்வோம்! ஏமாற்ற வருகிறார்கள்! ஏமாறாதீர் என எடுத்து சொல்வோம்! வெல்வோம்!” என்றும் பதிவிட்டுள்ளார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close