ஈராக்கில் அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதில் – 6 பேர் பலி , 17 பேர் படுகாயம்

ஈராக் தலைநகர் பாக்தாதில் அடுத்தடுத்து என 3 முறை குண்டுவெடிப்புகள் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்தாத் நகரில் அமைந்துள்ள அல்சாப் , அல் பையா மற்றும் அல் பலாதி யாத் போன்ற பகுதிகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனங்கள் வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலானது மக்கள் கூட்டம் நிரம்பிய பகுதியில் நடத்தப்பட்டுள்ளதால் உயிரிழப்பும் ,பலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுபேர்க்காததால், பாக்தாத் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close