கனமழையால் மராட்டிய மாநிலத்தில் திவாரே அணை உடைந்தது ; 6 பேர் பலி ,18 பேர் காணவில்லை.

மராத்திய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது சற்று தாமதமாக தொடங்கி இருந்தாலும் , தற்போது அம்மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரை புரட்டிப்போட்டு வருகிறது. கடந்த வெள்ளி கிழமை தொடங்கிய இந்த பருவ மழை இன்று வரையும் கனமழையாக பெய்து வருகிறது. தொடர்ந்து 5-வது நாட்களாக பெய்து வரும் இந்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

இந்நிலையில் ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணையில் தண்ணீர் நிரம்பியதால் அந்த அணை திடிரென உடைந்தது. இதனால் அருகில் உள்ள கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.இதுவரை 12 வீடுகள் அடித்து செல்லப்பட்டு உள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வெள்ளநீரில் இதுவரை 18 பேர் அடித்து செல்லப்பட்டு காணாமல் போய்யுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் தான் இத்தகைய பேரிடர்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close